Sunday, 15 April 2012

நிலா

அவளுக்கும் தமிழென்று பேர் - என்றும்
அவளெந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
அவளுக்கும் நிலவென்று பேர் - வண்ண
மலர்கொஞ்சும் குழலந்த முகிலுக்கு நேர்
அவளுக்கும் குயிலென்று பேர் - அந்தக்
குயில்கொண்ட குரல்கண்டு கொண்டாடும் ஊர்
அவளுக்கும் அன்பென்று பேர் - அந்த
அன்பென்ற பொருள்நல்ல பெண்மைக்கு வேர்

திருமறையின் தோற்றுவாய்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) 1:2 எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். 1:3 அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். 1:4 இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். 1:5 உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். 1:6 எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! 1:7 (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.